வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

கோக் ஸ்டுடியோ நிகழ்ச்சியில் பாட பட்ட சிறந்த பாடல் .  வாலி எழுதிய பாடல் . ரஹ்மான் சிறப்பாக பாடியுள்ளார் .

சனி, 25 ஜனவரி, 2014

 சிறுநிரக நோயாளிகளின் துயர்  துடைக்க முன் வருமா அரசு?

தமிழகத்தில் சிறுநிரக பாதிப்பின் காரணமாக சிறுநிரக மாற்று  அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியல் மிக நீளமாக உள்ளது . சாலை விபத்துகளில் உயிர் இழப்போர் பட்டியலும் சற்று ஏறக்குறைய சமமாக உள்ளது .எனவே சாலை விபத்துகளில் உயிர் இழந்தவர்கள் உடலை
உடல் தனமாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் .




உடல் தனம் கொடுக்க முன் வருபவர்களை ஊக்கப் படுத்த அரசு சில சலுகைகள்  அறிவிக்க வேண்டும் .

உடல் தனம் பற்றிய விழிப்புணர்வு  முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்த அரசு மற்றும் தனியார்  NGO நிறுவனத்தை சார்ந்தோர் ஊக்க படுத்த பட வேண்டும் .

அரசின் மருத்துவ காப்பிட்டு திட்டம் மூலம் dialysis சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது .இவர்களுக்கான சிகிச்சைக்கு செலவிடும் தொகையை கட்டிலும் குறைவான செலவில் மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்தி அணைத்து அரசு மருத்துவமனைகளின் சிறுநிரக அறுவை சிகிச்சை செய்யும் வசதி ஏற்படுத்தி மேம்படுத்த முடியும்  .

சிறுநீரக மோசடியை தடுக்க சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்ட விதி முறைகளில் தேவை கருதி சில மாற்றம் கொண்டுவரவேண்டும் .

உறவினர் அல்லாதோர் கொடுக்க முன்வரும் போது அதற்கான சட்ட சிக்கல்
நிக்க பட வேண்டும் . அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சட்டத்தில் மாற்றம் கொண்டு வர அரசு முனைய வேண்டும்